நடிகை லைலா ‘சர்தார்’ படத்தில் நடிக்க வந்தபோது அதன் இயக்குநரான பி.எஸ்.மித்ரனிடம் தன்னை ‘மேடம்’ என்று கூப்பிடக் கூடாது என்று சொன்னராம்.
‘சர்தார்’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசும்போது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசும்போது, “இந்தப் படத்துக்காக லைலா மேடத்துடன் நான் முதன்முதலில் தொலைபேசியில் பேசியபோது, என்னை “மேடம் என்று அழைக்காதீர்கள். ‘லைலா’ என்றே அழையுங்கள்” என்றார். “உங்களை என்னால் அப்படி அழைக்க முடியாது, நான் உங்களை ‘மேடம்’ என்றுதான் அழைப்பேன்” என்றேன். ஆனால், அவர் படம் வெளியான பின்பு என்னை “மேடம்” என்று அழைக்க கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளார். நானும் இந்தப் படம் வெளியான பின்பு அவரை “மேடம்” என்று அழைக்கப் போவதில்லை.
அவர் ஒரு அற்புதமான நடிகை. நான் சிறு வயதில் ‘கண்ணாலே மியா மியா’ பாடலைத்தான் கேட்டு ரசிப்பேன். முதல்முறையாக அவரை பார்த்தபோதும் அந்தப் பாடல்தான் நினைவுக்கு வந்தது. இப்படத்தில் லைலா மேடம் நடித்தது எனக்குப் பெருமையாகவுள்ளது..” என்றார் இயக்குநர் மித்ரன்