Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘டான்’ படத்தின் உலகளாவிய தியேட்டர் வெளியீட்டு உரிமைகள் விற்றுத் தீர்ந்தன

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான்’ படத்தின் அனைத்துப் பகுதிகளுக்குமான சர்வதேச உரிமையை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது.

இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்.எல்.சி. யு.எஸ்.ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது.

அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், மே 13-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், மே 12 அன்று இரவு சில பகுதிகளில் சிறப்பு காட்சிகள் இருக்கும் என்றும் ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.

பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) மற்றும் டிஎம்ஒய் (மலேசியா) ஆகியவற்றுடன் டான் வெளியீட்டுக்காக இந்த ஐபிக்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘டான்’ படத்தின் சர்வதேச விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கியதற்காக லைகா புரொடக்ஷன்ஸின் சுபாஸ்கரன், ஜி.கே.எம். தமிழ் குமரன் மற்றும் வீரா ஆகியோருக்கு ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் நன்றி தெரிவித்துள்ளது.

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த டான்’ படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே கே.எம்.பாஸ்கரன் மற்றும் நாகூரன் கையாண்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News