Thursday, April 11, 2024

‘சின்னக்குயில்’ சித்ரா, யார் ரசிகர் என தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாடகி சின்னக்குயில் சித்ராவின் குரலுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உண்டு. அவர், யாருக்கு ரசிகர் தெரியுமா?

இதை சித்ராவே தெரிவித்து உள்ளார்.

‘திண்டுக்கல் சாரதி’ படத்தில், ‘திண்டுக்கல்லு திண்டுக்கல்லு’ பாடல் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான அந்தோணி தாசன், தொடர்ந்து,  தானா சேர்ந்த கூட்டம், பாண்டிநாடு, குக்கூ உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை அளித்தார்: அவியல் மற்றும் எம்ஜிஆர் மகன் படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றினார்.

அவர் தற்போது புதிய இசை நிறுவனத்தை துவக்கி உள்ளார். இதற்கான விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி, பாடகி சின்னக்குயில் சித்ரா, கிராமிய பாடகி ‘கிடக்குழி’ மாரியம்மாள்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய ‘சின்னக்குயில்’ சித்ரா, “அந்தோணிதாசனுக்கு உலகெங்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த ரசிகர்களைப்போல நானும் அந்தோணிதாசனின் ரசிகை, இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். மேடையிலும் சொல்லி இருக்கிறேன்”  என்றார்

- Advertisement -

Read more

Local News