Friday, November 22, 2024

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி எதிர்ப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதிதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அனைத்து வகைப் படங்களிலும் நடிப்பதற்கு தகுதியான ஒரே ஆள் என்பது சினிமா துறையினரின் எண்ணம்.

அந்த வகையில் அவருடைய பல திரைப்படங்கள் கலவையான கதைக் களனில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவருக்கும் பெருமையளிக்கும்விதமான கதாபாத்திரங்கள்தான் கிடைத்து வந்தன.

இந்த நேரத்தில்தான் தமிழ் உணர்வாளர்களை வருத்தப்பட வைக்கும் ஒரு செய்தி வந்தது. பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்பதுதான் அந்தச் செய்தி.

முத்தையா முரளிதரன் ஒரு தமிழர்தான் என்றாலும் அவர் ஈழத் தமிழர்களுக்காக எந்தக் குரலும் கொடுக்காதவர் என்பதோடு எல்லா காலக்கட்டங்களிலும் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு துணை நின்றவர். இதனால் தமிழகத்தில் இருக்கும் தமிழ் ஈழ இன உணர்வாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு விஜய் சேதுபதிக்கு தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

அப்போதைக்கு அந்தப் படம் பற்றி எந்த முடிவும் இதுவரையிலும் எடு்க்கவில்லை என்று மட்டுமே சொல்லி பிரச்சினையை ஊறப் போட்டார் விஜய் சேதுபதி. ஆனால், இப்போது சில நாட்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி, முத்தையா கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாக ஒரு செய்தி வெளியில் பரவியது.

இதற்கு இதுவரையிலும் விஜய் சேதுபதி மறுப்பு வெளியிடாததால் செய்தி உண்மைதான் என்று தெரிந்து தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் விஜய் சேதுபதி மீது மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதேபோல் விஜய் சேதுபதியின் குருநாதரும், அவரை ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்தில் அறிமுகப்படுத்தியவருமான இயக்குநர் சீனு ராமசாமியும் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,

விஜய் சேதுபதியின் இதயம் உலகத் தமிழர்கள் ❤️

விஜய் சேதுபதி நடிக்கும்  

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம்

அதற்கு சான்று.

ஈழத் தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.

உள்ளங்கைக்கு முத்தம்.

மக்கள் செல்வா..

நீரே எங்கள்

தமிழ் சொத்து அய்யா…

நமக்கெதற்கு மாத்தையா?

மாற்றய்யா?”

என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News