Thursday, April 11, 2024

கமல்ஹாசன் திட்ட.. கடுப்பான சேரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கமலுக்கும் தனக்குமான சுவாரஸ்யம சம்பவம் குறித்து நடிகரும் இயக்குநருமான சேரன் பகிர்ந்துகொண்டார்.

அவர், “ஆரம்பத்தில் நான்  கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். கமல்ஹாசன் திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் மூலம் “மகாநதி” திரைப்படத்தில் சந்தான பாரதியிடம் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது ஒரு நாள் கமல்ஹாசன் திடீரென ஜலதரங்கம் என்ற வாத்திய கருவி வேண்டும் என கேட்டார்.

ஆனால் எனக்கோ ஜலதரங்கம் என்றால் என்ன என்றே தெரியாது. பிறகு அது ஒரு இசைக்கருவி என்று தெரியவந்தது. விசாரித்ததில் சென்னை மைலாப்பூரில் ஒருவர் அதனை வைத்திருக்கிறார் என்பதை அறிந்தேன்.  அந்த நபரின் வீட்டை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, அவரிடம் ஜலதரங்கத்தை ஷூட்டிங்கிற்காக கொடுங்கள் என கேட்டேன். அவரோ மறுத்தார்.

அவரை வற்புறுத்தி, ஒரு வழியாக  சமாளித்து, ஜலதரங்கத்தோடு அவரையும் கூட்டிக்கொண்டு படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தேன்.  ஆனால் அன்று அந்த காட்சியை படமாக்க முடியவில்லை.

“ஜலதரங்கம் வேண்டும் என்று முதலிலேயே கூறியிருந்தால் தயார் செய்து வைத்திருக்கலாம். இவர் ஏன் திடீரென என சொல்கிறார்” என்று கோபமடைந்தேன்.

இன்னொரு நாள் திடீரென மழை வந்துவிட்டதாம். வானத்தில் வானவில் தெரிய தொடங்கிவிட்டது. உடனே கமல்ஹாசன், “சீக்கரம் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க, கேமரா கொண்டுவாங்க, வானவில்லோட சேர்ந்து இந்த காட்சியை படமாக்கினால் நன்றாக இருக்கும்” என்றார்.

ஆனால் கேமரா யூனிட்டில் இருந்தவர்கள் மழை பெய்கிறது என்று கேமராவை ஒரு வண்டிக்குள் வைத்து தூரத்தில் எடுத்துக்கொண்டுப் போய் விட்டார்கள். நானும்  சக உதவியாளர்கள் சிலரும் வெகு தூரம் ஓடிச்சென்று கேமரா யூனிட்டிடம் சொல்ல அவர்கள் மழை பெய்வதனால் வர மறுத்துவிட்டார்கள்.

அவர்களை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, கேமராவை கொண்டு வருவதற்குள் வானவில் காணாமல் போய்விட்டது. உடனே கமல்ஹாசன் கண்டபடி திட்டினார்.

இதனால் கோபமடைந்த அசோசியேட் டைரக்டர் ஒருவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.   அசோசியேட் டைரக்டரே கிளம்பிவிட்டார், இனி நாம் இருந்து என்ன செய்ய என்று நினைத்த நானும் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன்.

ஆனால் அது எனக்கு ஏற்பட்ட அறியாமை என்று பின்னாளில்தான் எனக்கு தெரிந்தது” என கூறியிருக்கிறார் சேரன்.

- Advertisement -

Read more

Local News