Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

‘கேசினோ’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் கேசினோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்..!

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் கேசினோ.

இந்தப் படத்தில் மெஹந்தி சர்க்கஸ்’ நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, வாணி போஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரமேஷ் திலக், ஜான் மகேந்திரன், ‘எரும சாணி’ அமர் கீர்த்தி, நக்கலைட்ஸ் செல்லா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

எழுத்து, படத் தொகுப்பு, இயக்கம் : மார்க் ஜோயல்,  ஒளிப்பதிவு : விக்னேஷ் J.K, இசை : தினேஷ் நாகராஜன் & ஸ்டான்லி சேவியர், நிர்வாக தயாரிப்பாளர்: முகேஷ் சர்மா கலை மற்றும் தலைமை இணை இயக்குநர் : அமர் கீர்த்தி, விளம்பர வடிவமைப்பு: தீபக் போஜ்ராஜ் ஆடை வடிவமைப்பு : நித்யா கார்த்திகா, பத்திரிகை தொடர்பு – சதீஷ் (AIM).

புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள்  நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக  உருவாகியுள்ளது இத்திரைப்படம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தை தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது.

இந்தக் காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லரான இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கேசினோ’ படத்தின்  டீசர், டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News