Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

மஞ்சு வாரியருடன் திலீப் ரகசிய பேச்சு – கோர்ட்டில் வெளியான தகவல்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல மலையாள நடிகரான திலீப் தனது மாஜி மனைவி மஞ்சு வாரியருடன் சமீப காலத்தில் பேசி வந்திருப்பது நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரபல நடிகையின் பலாத்கார வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் திலீப் சென்ற மாதம் 3 நாட்கள் கொச்சி சிஐடி போலீஸாரிடம் விசாரணைக்காக ஆஜரானார். இந்த நிலையில் நேற்று காலை போலீஸ் தரப்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நடிகர் திலீப் தான் பயன்படுத்திய பழைய போன்களை எங்களிடம் ஒப்படைக்க மறுக்கிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்துவதால் இந்த முன் ஜாமீன் மனு விசாரணையை உடனடியாக இன்று (நேற்று) நடத்த வேண்டும் என்று கோரப்பட்டது. இதையடுத்து நேற்று பிற்பகல் இந்த மனுவை நீதிபதி கோபிநாத் விசாரித்தார்.

அப்போது திலீப் தரப்பிற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் உடனடியாக திலீப் ஒப்படைக்க வேண்டும். போனை ஒப்படைக்க மறுப்பது ஏன்? போலீசார் மீது நம்பிக்கை இல்லை என்றால் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் போனை ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார்.

திலீப் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடும்போது, “திலீப்பின் பழைய போனில் அவரது முதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியாருடன் திலீப் பேசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அது போலீசிடம் கிடைத்தால் அவருடைய தனிப்பட்ட விஷயங்கள் வெளியே செல்ல வாய்ப்பு உண்டு.

மேலும் அந்த போனில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. அது வெளியே சென்றாலும் திலீப்புக்கு சிக்கல் ஏற்படும். எனவே இந்த போனை ஒப்படைப்பது குறித்து சிறிது ஆலோசித்த பின்னரே முடிவு எடுக்க முடியும்…” என்று வாதிட்டார்.

தொடர்ந்து விசாரணை இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு நீதிபதி “திலீப் தனது செல்போன்களை சீல் வைக்கப்பட்ட கவரில் வைத்து உயர்நீதிமன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும்..” என்று உத்தரவிட்டுள்ளார்.

பழைய செல்போனை ஒப்படைக்க கோரி குற்றப் பிரிவு போலீசார் அனுப்பிய நோட்டீசுக்கு நடிகர் திலீப் அனுப்பிய பதில் கடிதத்தில், “நடிகை பலாத்காரம் நடந்த 2017-ம் ஆண்டு நான் பயன்படுத்திய செல்போனை, என்னை கைது செய்த பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டேன். அந்த போன் தடயவியல் பரிசோதனைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது.

தற்போது போலீஸார் கேட்டுள்ள போன்களில் ஒன்று வேறொருவரின் பெயரில் வாங்கப்பட்டதாகும். சில நாட்களுக்கு முன்புதான் அதைப் பயன்படுத்த தொடங்கினேன். இன்னொரு போனை வங்கி தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறேன். 3-வதாக இருந்த போனில்தான் நானும், பாலசந்திர குமாரும் பேசி வந்தோம். அதை எனது வக்கீல் மூலம் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளேன். நீதிமன்றம் கேட்டு கொண்டால் அந்த போனை சமர்பிக்கிறேன்.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி பைஜூ பவுலோசும், பாலசந்திரகுமாரும் பல முறை போனில் பேசி உள்ளனர். 2 பேரும் சேர்ந்துதான் என்னை சிக்க வைக்க சதி திட்டம் தீட்டி உள்ளனர். எனவே டிஎஸ்பியின் செல்போனை வாங்கி பரிசோதித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும்…” என்று திலீப் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News