Friday, September 20, 2024

தனுஷின் ‘வாத்தி’: ஜக்பாக்ஸ் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாத்தி’. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும் இப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாகிறது.

 இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் அனைத்து பாடல்கள் இடம்பெற்ற ஜக்பாக்ஸ்ஸை (தொகுப்பை) படக்குழு வெளியிட்டுள்ளது.

 

- Advertisement -

Read more

Local News