பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் 2018 டிசம்பர் மாதம் வெளியான படம் ‘மாரி 2’. அப்படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.கடந்த மாதம் 87 லட்சம் பார்வைகளும், இந்த மாதத்தில் ஆறு நாட்களில் 14 லட்சம் பார்வைகளும் அப்பாடலுக்குக் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த 2025ம் வருடத்தில் மட்டும் 21 மில்லியன் பார்வைகளைக் கடந்துவிட்டது. மொத்தத்தில் தற்போது 1650 மில்லியன் பார்வைகளை யு டியுப் தளத்தில் கடந்துள்ளது. இந்திய சினிமா பாடல்களில் இப்பாடல்தான் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையை கடந்த ஏழு வருடங்களில் வேறு எந்த ஒரு இந்திய மொழி திரைப்படப் பாடலும் முறியடிக்கவில்லை.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more