தனுஷின் 51வது படமாக, சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ என்ற படம் உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சார்ப், பாக்யராஜ், சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முழுமையாக முடிந்திருந்தாலும், ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டும் மீதமிருந்தது. நேற்று இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த பாடல் காட்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து இணையத்தில் கசிந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தப் பாடலை தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பாடியுள்ளார், மேலும் இதுவே தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் தனுஷ் முதன்முறையாக பாடும் பாடலாகும். மே 1ம் தேதி ஒரு முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் ஜூன் 20ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரவுள்ளது.