Monday, September 27, 2021
Home சினிமா செய்திகள் அருள்நிதியின் ‘டி பிளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டார்..!

அருள்நிதியின் ‘டி பிளாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டார்..!

MNM Films நிறுவனத்தின் சார்பாக ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரித்துள்ள படம் ‘டி பிளாக்’.

நடிகர் அருள்நிதி இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது இவர் நடிக்கும் 15-வது படமாகும். அவந்திகா மிஸ்ரா (Shades of Kadhal music album புகழ்) இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், உமா ரியாஸ், தலைவாசல்’ விஜய், கரு.பழனியப்பன், லல்லூ, கதிர் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அரவிந்த் சிங் (ஒளிப்பதிவு), Ron Ethan Yohan (இசை), கணேஷ் சிவா (படத் தொகுப்பு), பிரதீப் தினேஷ் (சண்டை இயக்கம்), வீரமணி கணேசன் (கலை இயக்கம்), கௌசிக் கிருஷ் (பின்னணி இசை), ஞானகரவேல் (பாடல்), Sync Cinema  (ஒலி வடிவமைப்பு), Oliver Nathanel (ஸ்டைலிஷ்), முத்துவேல் (ஸ்டில்ஸ்), வாசு (ஒப்பனை), முருகன் (உடைகள்), Infinity Media (DI), சண்முக பாண்டியன் M (DI Colorist), G பாரதி(VFX), NXTGEN Studio (விளம்பர வடிவமைப்புகள் ), பவிதார் சிங் -அஸ்வின் சிங் (இணை தயாரிப்பு) பணிகளை செய்துள்ளனர்.

பிரபல YouTuber  விஜய் குமார் ராஜேந்திரன்(எரும சானி புகழ்) இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான B.சக்திவேலனின் Sakthi Film Factory நிறுவனம், இந்த ‘டி பிளாக்’ படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.

Sakthi Film Factory நிறுவனத்தின் B.சக்திவேலன் இது குறித்து பேசும்போது, “திரைத்துறையில் முன்னணி ஆளுமையாக வலம் வரும், இயக்குநர் பாண்டிராஜ் போன்ற ஒருவர், எங்கள் திரைப்படத்தின் முதல் தோற்றத்தைத் வெளியிடுவது மிகச் சிறந்த தருணமாகும். தமிழ் திரையுலகிற்கு  அவர் அளித்த பங்களிப்பு தனித்துவமானது,

மேலும் ஃபர்ஸ்ட் லுக்கை அவர் வெளியிட்டதில், எங்கள் படக் குழு  மிகவும் உற்சாகத்தில் உள்ளது. படத்தினை  மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்ய  திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும்…” என்றார்.

இயக்குநர் விஜய்குமார் ராஜேந்திரன் பேசும்போது, “இந்தப் படத்தில் அருள்நிதியுடன் நானும் இணைந்து நடித்தது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது, அருள்நிதி தனது பாத்திரத்திற்காக மிகக் கடினமான  முயற்சிகளை மேற்கொண்டார். இப்படத்தில் ஒரு கல்லூரி மாணவரின் பாத்திரத்தில் நடிப்பதால்,  அவர் 7 கிலோ அளவுக்கு தனது உடல் அளவைக் குறைத்து மிக அழகான இளமையான தோற்றத்திற்கு மாறினார்.

Sakthi Film Factory நிறுவனம், திரைப்படத்தின்  முழு உரிமைகளையும் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது, இயக்குநர் பாண்டிராஜ் அவர்கள் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதும் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது..” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

பேய் மாமா – சினிமா விமர்சனம்

பாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் ஏலப்பன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக...

‘வீராபுரம்-220’ – சினிமா விமர்சனம்

ஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் குணசேகரன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக ‘அங்காடி தெரு’ புகழ் மகேஷ் நடித்திருக்கிறார். நாயகியாக...

ச்சூ மந்திரக்காளி – சினிமா விமர்சனம்

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார். புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன்...

சின்னஞ்சிறு கிளியே – சினிமா விமர்சனம்

செண்பா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில்நாதன் இந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ படத்தைத் தயாரித்திருக்கிறார்..! இந்தப் படத்தில் செந்தில்நாதன், சண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், குள்ளப்பள்ளி...