Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்தின் பெயர் ‘கஸ்டடி’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரியின் தயாரிப்பில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கி வரும் படத்திற்கு ‘கஸ்டடி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

நேர்மையான மற்றும் தீவிரமான ஒரு போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் தீமைக்கு எதிரானவராக நிற்கிறார். மேலும் தான் உறுதியாக நம்பும் ஒரு விஷயத்திற்காகவும் எதிர்த்து சண்டையிடுபவராகவும் இருக்கிறார்.

வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் இடம்பெறும் டேக் ரசிகர்களிடையே கவனத்தைப் பெறும். அதுபோல, இந்தப் படத்திற்கு ‘A Venkat Prabhu Hunt’ என்ற டேக் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள அனைத்து போஸ்டர்களும் இந்தக் கதை ஒரு ஆக்‌ஷன் எண்டர்டெயினராக இருக்கும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

‘நீ உலகத்தை எப்படி பார்க்க விரும்புகிறாயோ அதற்கான மாற்றமாக நீ இருக்க வேண்டும்’ என்ற மகாத்மா காந்தியின் புகழ் பெற்ற மேற்கோள் நாக சைதன்யாவின் இந்தப் படத்தின் கதாபாத்திரத்தோடு நெருங்கிய தொடர்புடையது.

ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்த பைலிங்குவல் திரைப்படம் அதிக அளவிலான தயாரிப்பு மதிப்பீடுகளைக் கொண்டது. மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்க, பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார்.

- Advertisement -

Read more

Local News