Thursday, April 11, 2024

கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம்.  மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது.

ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

உயர் படிப்புகளை படிப்பதற்கான திறமையும், தகுதியும் இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் பலரால் படிக்க முடியாமல் போகிறது.

அதிலும் கல்விக் கடன்  வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலைமை பெரும் துயரமானது. கல்விக் கடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.

இந்தப் படம் அந்தக் கல்விக் கடன்கள் குறித்துதான் விரிவாகப் பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும்விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். இந்த காலேஜ் ரோடு படம் சஸ்பென்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும். கமர்சியல் கலந்த சமூகப் பொறுப்புள்ள படமாக உருவாக்கியிருக்கிறோம்…” என்றார்.

நிகழ்வில் இயக்குநர் ஜெய் அமர்சிங், மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Read more

Local News