இனியா நடித்த ‘காஃபி’ படம் நேரடியாக கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியாகிறது..!

தனது சகோதரனைத் தேடும் ஒரு வலிமையான பெண்ணின் பயணத்தை சித்தரிக்கும் நடிகை இனியாவின் நடிப்பில் உருவான ‘காஃபி’ திரைப்படம் வரும் நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது.

இத்திரைப்படத்தில் நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். மேலும் நிஜ வாழ்க்கை ஜோடியான நடிகர் ராகுல் தேவ் மற்றும் நடிகை முக்தா இருவரும் முதல்முறையாக  தமிழ் படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையை பிரதிபலித்து, ஊழல் மற்றும் மனித கடத்தலுக்கு மத்தியில் காணாமல் போன தனது சகோதரனைக் கண்டுபிடிக்க துடிக்கும் ஒரு சகோதரியின் தேடலை நேர்த்தியாக சித்தரிக்கும் இந்த அதிரடி திரில்லரைக் அறிமுக இயக்குநரான சாய் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தாலும், நம்பிக்கையை இழக்காமல் ஒரு போலீஸ் ஆக ஆசைப்படுகிறார் சத்யா(இனியா). இருப்பினும், சூழ்நிலைகள் அவளை ஒரு வாகன ஓட்டுநராக மாற்றி விடுகின்றன. இந்தத் தொழிலின் மூலம், அவள் தன் ஒரே சொந்தமான அவளுடைய சகோதரன் கார்த்திக்கிற்காக வேலை செய்கிறாள்.

ஒரு நாள் கார்த்திக்கிற்கு பெங்களூரில் வேலை கிடைக்கிறது. ஆனால் அவனது மகிழ்ச்சி சிறிது காலம் மட்டுமே, அவன் நினைத்தற்கு மாற்றாக மனித கடத்தல் கும்பலிடம் சிக்கி கடத்தப்படுகிறான். 

சத்யா தனது சகோதரனின் இருப்பிடத்தைக் கண்டறிய  தனது தேடலை தொடங்குகிறாள். அந்தக் குற்றச் சரித்திரத்தின் இருண்ட உலகிற்குள் செல்கிறாள். சத்யாவால் தன் சகோதரனைக் காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்தப் படத்தின் மீதிமான கதை.

இந்தக் ‘காஃபி’ படம் குறித்து இயக்குநர் சாய் கிருஷ்ணா பேசும்போது, “காஃபி’ திரைப்படத்தின் நேரடி தொலைக்காட்சி பிரீமியர் மூலம், எனது வாழ்வின் இந்த மைல் கல் சாதனையை கலர்ஸ் தமிழ் பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தன் அன்புக்குரிய சகோதரனைக் காப்பாற்ற அனைத்து முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடும் வலிமையான பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எனது முதல் படம் அமைந்திருப்பதில் நான் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு பெண்ணின் வலிமையையும், தைரியத்தையும் மிகச் சிறந்த முறையில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு உத்வேகத்தை வழங்குவதே இத்திரைப்படத்தின் கதை ஆகும்.

பொறியியலில் இருந்து திரைப்படத் தயாரிப்பிற்குத் திரும்பிய நான், இந்தப் திரைப்படத்தின் வருகைக்கு பார்வையாளர்கள் கொடுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால், இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு அற்புதமான வார இறுதியில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் நேரடி பிரீமியரில் சீட்டின் இருக்கை நுணியில் நம் அனைவரையும் இந்தப் படம் கொண்டு செல்லும்  என்று நான் உறுதியாக நம்புகிறேன்..” என்றார்.

நடிகை இனியா இந்தப் படம் குறித்துப் பேசும்போது, “இது ஒரு அற்புதமான அனுபவம். குறிப்பாக ராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே போன்ற மூத்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் அவர்களிடமிருந்து நிறைய  கற்றுக் கொள்ளும் அனுபவம்  எனக்கு கிடைத்தது.

சத்யா போன்ற ஒரு துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன், அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளை எடுப்பது மிகவும் சவாலாகவும் இருந்தது. சக்தி வாய்ந்த பெண் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் பல  இதற்கு முன் வெளிவந்துள்ளன. ஆனால் இந்த காஃபி’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு இன்னும் ஒரு படி மேலான அனுபவத்தை கொடுக்கும்..” என்றார்.

வரும் நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகவிருக்கும் இந்த ‘காஃபி’ படத்தை கண்டு ரசியுங்கள்.