Wednesday, April 10, 2024

சிவாஜி வாழ்க்கையில் அப்படியே  நடந்த முதல் மரியாதை ஸீன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, ராதா உள்ளிட்டோர் நடித்த முதல் மரியாதை திரைப்படம் மறக்க முடியாத ஒன்று. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, பார்ப்பவர் கண்கள குளமாக்கிவிடும்.

சிவாஜி மரணப்படுக்கையில் நினைவிழந்து கிடப்பார்.. அவரைக் காண்பதற்காக சிறையில் இருந்து பரோலில், கிராமத்துக்கு வருவார் ராதா..  படகில் இருந்து இறங்கி அந்த கிராமத்து மண்ணில் காலை வைப்பார்..

அவர் ஆற்றங்கரையில் காலை வைக்க.. இங்கே  சிவாஜிக்கு உடல் சிலிர்க்கும்..

இந்தக் காட்சியைக் கண்டு கலங்காதவர்களே இல்லை. ஆனாலும் விதி விலக்காக சிலர், “இது ஓவர் கற்பனை” என்று விமர்சிக்கவும் செய்தனர்.

ஆனால் இது போன்ற ஒரு சம்பவம் சிவாஜியின் வாழ்க்கையில் நடந்தது. இது குறித்து டூரிங் டாக்கீஸ் யு டுயுப் சேனலில், சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்:

“சிவாஜி ரசிகர் மன்ற வேலூர் மாவட்ட தலைவராக இருந்தவர் பாலாஜி. அவருக்கு உடல் நலம் இல்லை என்பதை அறிந்து பார்க்கச் சென்றார் சிவாஜி.

வழியிலேயே, ‘பாலாஜிக்கு பேச்சு மூச்சு இல்லை… பல நாட்களாக நினைவிழந்து கிடக்கிறார்’  என்ற தகவல் கிடைக்கிறது.

கனத்த மனதுடன் பாலாஜியின் வீட்டுக்குச் செல்கிறார் சிவாஜி. சிறிய சந்தில், சிறிய வீடு. சிவாஜி வருகிறார் என்று தெரிந்தவுடன் கூட்டம் கூடி நிற்கிறது.

அந்த வீட்டின் படியேறிய சிவாஜி, இயல்பாக கனைத்து, “பாலாஜி.. அண்ணன் வந்திருக்கேன்டா..” என்கிறார்.

நினைவிழந்து கிடந்த பாலாஜியின் கை தானாக ஆடத்துவங்கியது..

பாலாஜியின் அருகில் அமர்ந்த சிவாஜி, “உடம்பை பார்த்துக்க.. அடுத்த முறை வரும்போது எழுந்து நின்று அண்ணன்கிட்ட பேசணும்..” என்று நா தழுதழுக்க கூறிவிட்டு கிளம்புகிறார்.

மூன்று மாதம் கழித்து நகரி பகுதியில் ஒரு விழாவில் கலந்துகொண்டார் சிவாஜி. அங்கே கூட்டத்தில் ஒருவராக, எம்பி எம்பி குதித்து சிவாஜியை காண துள்ளிக்குதித்து நின்று இருக்கிறார் அதே பாலாஜி.

ஆனந்த அதிர்ச்சி அடைந்த சிவாஜி,  அவரை அழைத்து, “இப்பத்தன் உடல்நிலை சரியாகி இருக்கு.. என்னைப் பார்க்க ஏன் இவ்வளவு தூரம் வந்தே..வீட்டுக்குப்போய் ரெஸ்ட் எடு” என்று அன்பாகச் சொல்லி அனுப்பிவைத்து இருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News