இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்!

நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக – வில்லனாக வரும் ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு.

இதே கதையை இந்தியில் ரமேஷ் சிப்பி, சக்தி என்ற பெயரில் ரீ மேக் செய்தார். அங்கே மகன் வேடத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, அவரது கேரக்டரை வில்லனாக காட்டாமல், சந்திர்ப்ப சூழலால் தவறான வழிக்குச் சென்றதாக கதை மாற்றப்பட்டது. தவிர, இறுதியில் வில்லன்களை அவரே புரட்டி எடுப்பார்.

இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது” என்றார் செல்வராஜ்.