“பொள்ளாச்சி சம்பவம் பற்றி திரைப்படங்களில் பேசப்பட வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதெல்லாம் இல்லாமல், அந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்பதுதான் இப்போது முக்கியமாக இருக்கிறது.
இந்தக் காலத்தில் திரைப்படங்களில் சம உரிமை பற்றி, ஜாதி பற்றி பேசுவதெல்லாம் அதிகரித்துள்ளது. ஆனால், பெண்கள் மீதான வன்முறை இன்றும் பேசப்படுவதில்லை. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவள் படிப்பு அவள் குழந்தை பெற்றுக் கொள்வதுவரை அவளது குடும்பமே தீர்மானிக்கிறது.
அந்த வகையில் இந்திய கலாச்சாரமே பெண்களை அடங்கி, நடக்கவே பழக்குகிறது. ஒவ்வொரு வீடுமே பெண்களுக்கு பொள்ளாச்சிதான். ஆனால், பொள்ளாச்சி பாலியல் வன்முறை பொதுவெளியில் வந்ததால் அதன் மீது வெளிச்சம் விழுந்துள்ளது.
இது மாதிரியான கதைகள் மீண்டும், மீண்டும் திரையில் பேசப்பட வேண்டும். இந்தக் கதையினை எடுத்திருக்கும் படக் குழுவினருக்கு எனது வாழ்த்துகள்..” என்றார்.