Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

தென் கொரிய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சாட் பூட் த்ரி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அருணாச்சலம் வைத்யநாதனின் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள ‘சாட் பூட் த்ரி’ என்ற தமிழ் படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப் பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) கிடைத்துள்ளது.

ந்த ‘சாட் பூட் த்ரி’ படத்தின் ஒளிப்பதிவு சுதர்சன் ஸ்ரீநிவாசன், கலை இயக்கம் – ஆருச்சாமி, படத் தொகுப்பு – பரத் விக்ரமன், இசை – பிரபல வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா – திரைக்கதை ஆனந்த் ராகவ் மற்றும் அருணாச்சலம் வைத்யநாதன்.

விருதிற்கான சான்றிதழையும், பண முடிப்பையும் விழாவில் கலந்து கொண்ட படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு. அருணாச்சலம் வைத்யநாதன் பெற்றுக் கொண்டார்.

2016-ம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருது பெரும் முதல் இந்திய திரைப்படம் இந்த சாட் பூட் த்ரி’ படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இயக்குநர் வைத்தியநாதன் பேசும்போது, “நாடு, மொழி உள்ளிட்ட காரணிகள் கடந்து கொரியாவில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு “அன்பிற்கோர் பஞ்சமில்லை” என்ற தன் படத்தின் மூலக் கருவை உள்ளபடியே இயல்பில் உணர்த்தியது தமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது…” என்றார்.

- Advertisement -

Read more

Local News