இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குள் மூடப்பட்டுள்ளன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பும், லட்சணக்கணக்கான தொழிலாளர்களின் வேலையிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இப்போது கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸூடன் வாழப் பழகிய நிலையில் மக்கள் இருப்பதால் வரும் அக்டோபர் 15 முதல் இந்தியாவில் திரையரங்குகளை திறக்கலாம் என்று மத்திய அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
அப்படி திரையரங்குகளை திறக்கும்பட்சத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு இன்றைக்கு வெளியிட்டுள்ளது.
“திரையரங்குக்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
50 சதவிகிதம்தான் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
திரையரங்குக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கும்போது கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் அனுமதிக்க வேண்டும்.
பார்வையாளர்கள் தகுந்த இடைவெளிவிட்டு அமர வைக்க வேண்டும்.
திரையரங்குக்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி வழங்க அனுமதியில்லை.
ஒவ்வொரு காட்சி முடிந்த பிறகும் அரங்கத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.”
இது போன்ற 24 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.