பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 3 வாரங்கள் ஆகிவிட்டன. 20 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9-ம் தேதி தொடங்கிய இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வாரத்தில் எவிக்ஷன் நடைபெற்றது.
இதில் நடன இயக்குநர் சாந்தி முதல் நபராக வெளியேற்றப்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஜி.பி.முத்துவும் பிக்பாஸ் வீட்டில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறினார். இதனால் ஒரே வாரத்தில் இரண்டு பேர் வெளியேறினார்கள்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. காரணம்… இதற்கான போட்டியில் அசீமும், அசலும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர்.
அசீம் மூர்க்கமாக பேசுவதும், கோபப்படுவதுமாக இருந்தார். அசல் கோளாறு பெண் போட்டியாளர்களை தடவுவது, கடிப்பது, அவர்களுடன் படுத்துக் கொள்வது, அவர்கள் மீது கால் போடுவது என தொடர்ந்து சில்மிஷம் செய்து வந்தார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் அசீமையும் அசலையும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுங்கள் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அசல் கோளாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அசல் கோளாறு பெண் போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவோடு வாக்குகளை அளிக்காமல் புறக்கணித்து அவரை வெளியேற்றியுள்ளனர்.