Saturday, July 27, 2024

விமர்சனம்: பிகினிங்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்டங்களில் வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று வரும்.   இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள்.

மனவளர்ச்சி அற்ற இளைஞன், அவனது அம்மா.. இவர்கள் வசிக்கும் வீடு ஒரு காட்சி. ஒரு இளம்பெண்ணை மூவர் கடத்தி வைத்திருக்கு அறை ஒரு காட்சி. இரண்டுக்குமான முடிச்சை சிறப்பாக ஒருங்கிணைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

வினோத்கிஷனின் மூளைவளர்ச்சியற்ற  இளைஞராக வருகிறார்.  அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. அம்மாவிடம் அப்பாவித்தனமாக பேசுவது.. இளம்பெண்ணை கடத்திவிட்டார்கள் என்பதை அறிந்து துடிப்பது என அசத்தி இயிருக்கிறார் மனிதர்.

நாயகி கெளரிகிஷனும் சிறப்பாக நடித்து உள்ளார். தன்னை கடத்தியவர்களிடம் இருந்து மீள அவர் எடுக்கும் துணிச்சலான முயற்சிகள்,
வினோத்கிஷனுக்கு தனது நிலையை புரியவைக்க அவர் படும் பாடு…. ரசிக்கவைக்கிறார்.

சிரித்துக் கொண்டே கொடூரங்களை செய்யும் சச்சின், அவரை நம்பி ஏமாறும் மகேந்திரன், சுருளி,லகுபரன் மற்றும் ஒரு சில காட்சிகளில் வருகிற ரோகிணி, பாலா ஆகிய அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் இரு காட்சிகள் என்பதை நமக்கு உறுத்தாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வீரக்குமார்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் பின்னணி  படத்துக்கு பலம்.


எழுதி இயக்கியிருக்கும் ஜெகன்விஜயா தனது உழைப்பை கொட்டி இருக்கிறார். முக்கியமாக, சிறப்பான திரைக்கதை.  இரு வேறு காட்சிகளையும் ரசிகர்கள் உள்வாங்கும் அளவுக்கு படத்தை  அளித்து இருக்கிறார்.

 வித்தியாசமான திரைப்படம்.

- Advertisement -

Read more

Local News