“பொ.செ. கல்கி, ஒரு களவாணி”: சொன்னவர் யார் தெரியுமா?

”பொன்னியின் செல்வன்”  உள்ளிட்ட நாவல்கள், மற்றும் ஏராளமான சிறுகதைகள் எழுதியவர் கல்கி.

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என போற்றப்படுபவர்.

ஆனால் அவர் உச்சத்தல்   இருந்த காலத்திலேயே அவரை கடுமையாக விமர்சித்தவர் ஒருவர் உண்டு. அவரும் மிகச்சிறந்த எழுத்தாளர்தான். அவர்.. புதுமைப்பித்தன். கல்கியைப் பற்றி

“கல்கி, பிற மொழி கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கிறார். அதனை அப்படியே தமிழிலுக்கு ஏற்ற மாதிரி எழுதி தனது பெயரை போட்டுக்கொள்கிறார்.

ஊரையும் பேரையும் மாற்றி ‘தன் பெயரில்’ சொந்தமாக்கிக் கொள்ளும் ‘குல்மால்’ வேலையைத்தான் அவர் செய்கிறார். இது பெரும் மோசடி.

ஆசிரியர் செய்துள்ள இலக்கிய சேவையை, பல்லாயிரக்கணக்கான வாசகர்களும், கல்வியறிவிற் சிறந்த பெரியோர்களும், பாராட்டி வருகிறார்களாமே;

அவற்றின் வண்ட வாளம் வருமாறு:

.

கல்கி பெயரில் வெளியான ‘சாரதையின் தந்திரம்’ என்ற தொகுப்பில்  பிரசுரமாகியுள்ள கதைகளில், பெரும்பாலானவை  இங்கிலீஷில் ‘கிளிம்ஸஸ் பிரம் இந்தியன் லைப்’ (இந்திய வாழ்க்கை சித்திரங்கள்) என்ற புஸ்தகத்திலிருந்து திருடப்பட்டவை.

‘புது ஓவர்ஸீர்’ என்ற கதை பிரேமசந்த் எழுதின ’ஸால்ட் இன்ஸ்பெக்டர்’ என்பது.

‘காங்கிரஸ் ஸ்பெஷலில் கோர சம்பவம்’ என்பது அமெரிக்காவில் ஹாஸ்ய சக்கரவர்த்தி என்று சொல்லப்பட்ட மார்க் ட்வெய்ன் எழுதிய ‘கானிபலிஸம் இன் ஏ கார்’ (ரயில் வண்டியில் நரமாம்ச பட்சணி) என்ற கதையின் திருட்டு நகல்.

இவை தவிர, இவரது ‘ஏட்டிக்குப் போட்டி’யில் பெரும்பாலான கதைகள், ஜெரோம் கே-ஜெரோம் எழுதிய ‘திரீ மென் இன் எ போட்’ என்ற புஸ்தகத்திலிருந்து வந்த ‘களவாணி இலக்கியம்.’

.

திருட்டுத் தொழில் சாதாரணம்; போலி கவுரவத்துக்காக அதைச் செய்ய ஒரு மனிதன் துணியும்போது, அதைப் பாராட்டும் சமுதாயத்தைப் பற்றித்தான் வருந்த வேண்டியிருக்கிறது” என்கிறார் புதுமைப்பித்தன்.

(”களவாணி – இலக்கியம்” என்று   தலைப்பிட்டு   ரசமட்டம்   என்கிற   பெயரில்   1944  ஆகஸ்ட்  1,   அன்று    புதுமைப்பித்தன்   எழுதிய   கட்டுரை)