அதர்வா-சாம் ஆண்டன் இணையும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

நடிகர் அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் Pramod Films நிறுவனத்தின் 25-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

இது குறித்து தயாரிப்பாளர் பேசுகையில், “எங்களது 25-வது திரை படைப்பின் டயலாக் மற்றும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவேண்டியுள்ளது. அதனை சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது.

இந்த இனிய நேரத்தில் நடிகர் அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் மற்றும் படக்குழு அனைவரின் அயராத உழைப்பிற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். மிகச் சிறந்த திட்டமிடலுடன் அருமையான இயக்கத்தினை செய்தார் இயக்குநர். திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்ட பொருட்செலவில் படத்தின் படப்பிடிப்பை முடித்தார் இயக்குநர் சாம் ஆண்டன்.

விரைவில் படத்தின் பாடல்களின் படப்பிடிப்பும் முடிக்கப்பட்டு, படத்தின் ட்ரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்…” என்றார்.

இயக்குநர் சாம் ஆண்டன் பேசும்போது, “மிகச் சிறந்த ஒத்துழைப்பினை நல்கியதற்காக Pramod Films நிறுவனத்தாருக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அதிலும் இந்த பொது முடக்க காலத்தில் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பு பணிகளை துவங்க தயங்கி நின்றபோது, துணிவாக களமிறங்கி மிகச் சிறந்த திட்டமிடலுடன் இப்படத்தினைத் தயாரித்தனர்.

புது ஐடியாக்களுக்கு அவர்கள் எப்போதும் மறுப்பு தெரிவுத்ததே இல்லை. விரைவில் பாடல்களை படமாக்கவுள்ளோம். படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருக்கும்…” என்றார்.

100’ பட வெற்றி கூட்டணி, திலீப் சுப்பராயன் ஒருங்கமைத்த, ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ஆக்சன் காட்சி என இந்தப் படத்தின் சிறப்புக்களால் இப்படம் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை விதைத்துள்ளது.