Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஷங்கரரை மீண்டும் தயாரிப்பாளர் ஆக்கிய ‘அநீதி’!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் “எஸ் பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி, “காதல்”, “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, “வெயில்”, “கல்லூரி”, “அறை எண் 305-ல் கடவுள்”, “ஈரம்”  என தரமான படங்களை தயாரித்தார்.

பிறகு, 2017 ஆம் ஆண்டு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தை தயாரிக்க தொடங்கினார். பல்வேறு பிரச்சினைகளால் அந்த படம் நின்று போனது.

இதனை தொடர்ந்து  படங்களை இயக்கும் பணிகளிலேயே முழுக்கவனம் செலுத்தி வந்தார்  ஷங்கர்.

இந்த நிலையில்  வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் “அநீதி” படத்தின் போஸ்டரில்  ‘ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வழங்கும்  அநீதி’  என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து திரைப்பட செய்தியாளர் பிஸ்மி ஒரு யு டியுப் சேனலில் , “பட இயக்கத்தில்தான் முழுமையாக ஷங்கள் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில், வசந்தபாலன், தான் இயக்கி தயாரித்த அநீதி படத்தை வெளியிடமுடியாத நிலையில் இருந்தார். அந்த படத்தை ஷங்கருக்கு திரையிட்டு காண்பித்தார். ஷங்கருக்கு படம் பிடித்துப்போனதால் வெளியிடுவதாக முடிவெடுத்துவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News