Wednesday, November 20, 2024

ஆனந்தராஜ் அகந்தையை ஒழித்த அந்த சம்பவம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகர் ஆந்தராஜ், ஒரு பேட்டியில், “ஆரம்பத்தில் எனக்கு, ‘நாம நடிகன்.. எல்லோருக்கும் நம்மை தெரியும்..’ என்கிற அகந்தை இருந்தது..!

ஒரு முறை, விஜயகாந்த் படத்துக்காக சென்னை அசோக் நகரில் ஒரு சாலையில் படப்பிடிப்பு நடந்தது.  எங்களை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. விஜயகாந்தும் நானும்  சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தோம்.

அப்போது ஒருவர் பைக்கில் வந்தார். ‘நகருங்க.. நகருங்க’.. என எல்லோரையும் விலக்கிவிட்டு எங்களிடம் வந்தார்.

வந்த வேகத்தில்,  ‘இப்படி நடு ரோட்டில் ஷூட்டிங் நடத்தினால் நாங்கள் எப்படி போறதுது’ என திட்டிட்டு போனார்.

அப்பத்தான் ஒரு விசயம் புரிஞ்சுச்சு.
சினிமாவை பார்க்காதவர்களுக்கும், அதை பெரிதாக நினைக்காதவங்களுக்கும் நாம ஒரு பொருட்டே இல்லேனு புரிஞ்சுச்சு.

நாம ஒன்னும் வானத்தில் இருந்து குதிக்கலை. இந்த வாழ்க்கை, இறைவன் நமக்கு அளித்த பிச்சை அப்படினு உணர்ந்தேன்”  என்றார் ஆனந்தராஜ்.

- Advertisement -

Read more

Local News