Thursday, April 11, 2024

“நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் ஆனந்த்ராஜ்தான் ஹீரோ” – பரபரப்பை கிளப்பிய அமீர் பட இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக அமீர், கதாநாயகியாக சாந்தினி ்ரீதரன், இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அசோக் சார்லஸ் படத் தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதன் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

பாடல்களை பா.விஜய் எழுத, அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வசனங்களை பாலமுரளி வர்மன் மற்றும் அஜயன்பாலா இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆதம்பாவா பேசும்போது, “வெளி கம்பெனி படமொன்றில் அமீர் நடிப்பது இதுவே முதல் தடவை. பெரும்பாலும் அவரை கதையின் நாயகன் என்று சொல்கிறார்கள். அவர் கதையின் நாயகன் அல்ல. கதாநாயகன்தான்.

இந்த படத்தை தயாரித்து இந்த நிலைக்கு கொண்டு வர நிறைய காலதாமதம் ஆனது உண்மைதான். அதேசமயம் இந்த படம் உருவாகும்வரை என்னை அவர் நம்பினார். அவரை நான் நம்பினேன். இந்தப் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுவதன் மூலம் இன்னும் பெரிய அளவிற்கு இந்தப் படம் பேசப்படும்.

இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. இந்த படத்தில் நடிகர் ஆனந்தராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில்கூட ஹீரோ ஆனந்தராஜ்தான். அந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்படும்…” என்று கூறினார்.

- Advertisement -

Read more

Local News