Wednesday, September 18, 2024

அஜித் – விஜய் படப்பிடிப்புகள் எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டு ஆரம்பத்தில் விஜய் ‘வாரிசு’, அஜித் ‘துணிவு’ என இருவர் படங்களும் ஒரே நாளில் வெளியாகின.

விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தை முடித்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். லியோ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால் அஜித்தை பொறுத்தவரை அடுத்த படத்துக்கான நகர்வு தள்ளிப்போய்க்கொண்ட இருக்கிறது.

இந்நிலையில் தனது பைக் டூர் பயணத்தை முடித்து வந்த அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்கு தயாராகியுள்ளார். தற்போது இருவரின் படங்களும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

இரண்டு படங்களின் படப்பிடிப்புகளுமே ஒரே நேரத்தில் துவங்க உள்ளதால், பட ரிலீஸும் ஒரே நேரத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

- Advertisement -

Read more

Local News