அல்டிமேட் ஸ்டாரான ‘தல’ அஜித் கதாநாயகனாக நடித்த ‘பில்லா’ திரைப்படம் 2017-ம் ஆண்டில் வெளியாகியது. விஷ்ணுவர்த்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
அஜீத்துடன், பிரபு, ரகுமான், சந்தானம், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமீதாவும் நடித்திருந்தார்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த ‘பில்லா’ திரைப்படம் முழுக்க, முழுக்க மலேசியாவிலே படமாக்கப்பட்டது.
ஆனந்தா பிக்சர் சர்க்யூட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம், வசூலில் புதிய சாதனை படைத்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
வித்தியாசமான ஸ்டைலில் அஜீத் நடித்திருந்த ‘பில்லா’ நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் மார்ச் 12-ம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவிருக்கிறது
அஜித்தின் படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகின்றது என்பதால், இந்த ‘பில்லா’ படத்தை உற்சாகமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.