Saturday, September 14, 2024

அஜித் கார்! ஆக்ஸிடண்ட் செய்த எஸ்.ஜே. சூர்யா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ்.ஜே. சூர்யா இயக்கிய முதல் படம், வாலி. இதில் அஜித் இரட்டை வேடத்தில நடித்திருந்தார்.

இது குறித்து வீடியோ பேட்டியில் கூறிய எஸ்.ஜே.சூர்யா, “ அப்போது நான் வறுமையில் இருந்தேன். படம் வெற்றி பெற்றது. உடனே அஜித் அவர்கள் என்னிடம், ‘உனக்கு என்ன கலர் பிடிக்கும்’  என்றார். ‘உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்’  என்றேன். அவர், ‘வெள்ளை’ என்றார். நான், ‘எனக்கும் வெள்ளைதான் பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டேன்.

உடனே வெள்ளை கலரில் ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டார் அஜித்.  அப்போது எனக்கு கார்  ஓட்டத் தெரியாது.  ஏறி உட்கார்ந்து காரை செலுத்தியவன், நேராக ஒரு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டேன்.. “ என்று மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார் எஸ்.ஜே. சூர்யா.

- Advertisement -

Read more

Local News