கடந்த திங்கட்கிழமை முதல், திரையரங்குகள் ஐம்பது சத பார்வையாளர்களுடன் இயங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துவிட்டது.
இதையடுத்து, வெளியீட்டுக்குக் காத்திருக்கும் நாற்பது படங்கள் திரைக்கு வர தயாராகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த ‘அக்னிப்பொறி’ திரைப்படம்.
இந்தப் படத்தை கருப்பாய் ஆண்டாள் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் ஆனந்தன் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஆனந்தன் – அபிநயா இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். மேலும், வேல்முருகன், சரஸ்வதி, தி.நகர் குமார், முகம்மது சாகில், விஐய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் செந்தில் ஆனந்தன் படத்தை இயக்க, டைட்டான் முருகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வேலன் சகாதேவன் இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் செந்தில் ஆனந்தன் கூறுகையில், ‘ஒரு சமானியன் மக்களையும், நாட்டையும் உண்மையாக நேசித்து அரசியலுக்கு வந்தால் அவன் நிலை என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதை…!” என்றார்.
இந்தப் படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.