தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் சமந்தா.
இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ‘இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும்’ என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் மருத்துவமனையில் சேரும் முன்பு,வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற இந்தி வெப் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார். சிகிச்சை காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்த அவரை திரையுலகினர் வாழ்த்தி வருகின்றனர்.