பாலிவுட் நடிகையாக இருந்தாலும், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலமாகவே பிரபலமாகியவர் ஊர்வசி ரத்தேலா. தமிழில் ‘த லெஜண்ட்’ படத்திலும் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியாகியுள்ள ஹிந்திப் படமான ‘ஜாட்’ இல் இடம்பெற்ற ‘சாரி போல்’ பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் யூடியூப்பில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

அதே வாரத்தில், நடிகை தமன்னா சிறப்பு நடனமாடியுள்ள ‘ரெய்டு 2’ படத்தில் இடம்பெற்ற ‘நாஷா’ என்ற பாடலும் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. படம் இன்னும் திரைக்கு வராத நிலையில், பாடல் மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது வரை இந்த பாடல் 21 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஒரு ரசிகர், “நாஷா பாடலைவிட சாரி போல் பாடல் மிக சிறந்ததாக உள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார். அந்தக் கருத்துடன் கூடிய ஸ்க்ரீன்ஷாட்டை ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளார். ஆனால் யாரோ அந்த ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்துக் கொண்டு சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். இதனால், பிற நடிகைகளை சீண்டிக்கொண்டு திரையுலகில் பிரபல attention seeker ஆக இருப்பதாக ஊர்வசிக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.