விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கும் புதிய படம்

விஷால் தனது அடுத்தப் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்துவிட்டார். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தற்காலிகமாக #விஷால்32’ என்று பெயர் வைத்துள்ளார்கள்.

விஷாலுக்கு நெருக்கமான நடிகர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து ‘ரமணா புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம்தான் இந்த ‘#விஷால்32’ படத்தை தயாரிக்கிறது. 

ஏற்கனவே, சன் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான, விஷால் பங்கு பெற்ற ‘சன் நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சியை இந்த ‘ராணா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்’தான் தயாரித்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தனது நண்பர்கள்  ரமணா, நந்தா தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார் விஷால்.

ஏற்கெனவே சமர்’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக திரிஷாவுடன் இணைந்து நடித்திருந்த சுனைனா, இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தனி நாயகியாக களமிறங்குகிறார்.  சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.

சமீபத்தில் வெளியான பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய A.வினோத்குமார் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.  வசனம் – A.நந்தகுமார் / பொன்பார்த்திபன்.

இசை – சாம் C.S., ஒளிப்பதிவு –  பாலசுப்பிரமணியெம், கலை இயக்கம் – எஸ்.கண்ணன், உடைகள் – வாசுகி பாஸ்கர், சண்டை இயக்கம் – திலீப் சுப்பராயன், நடன இயக்கம் – தினேஷ், நிர்வாகத் தயாரிப்பு – பாலா கோபி, தயாரிப்பு மேலாளர் – ஹரி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், கிராபிக்ஸ் – ஹரிஹர சுதன், ஒலிக் கலவை – தபஸ் நாயக், வடிவமைப்பு – கண்ணதாசன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் ஆரம்பமானது.