Friday, April 12, 2024

ஷிவானி நாயகியாக நடிக்கும் ‘பம்பர்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேதா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சு.தியாகராஜா தயாரித்திருக்கும் படம் பம்பர்’.

இந்த ‘பம்பர்’ படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்.  இவருக்கு ஜோடியாக ஷிவானி நடித்துள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஆலம்பனா’ மற்றும் ‘கடமையை செய்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத் தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றுகிறார். இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம்.செல்வக்குமார் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் செல்வக்குமார் பேசும்போது, “கேரள மாநிலத்தில் விற்பனையாகி வரும் லாட்டரி தொழிலை மையமாகக் கொண்டது இத்திரைப்படம்.  

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு எருமேலியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பெருவழிப் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேரள அரசின் உரிய அனுமதியுடன் நிறைவடைந்தது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கி பிப்ரவரி மாதம் நிறைவடையும். சில முக்கிய காட்சிகள் தூத்துக்குடியில் படமாக்கப்படவுள்ளன…” என்றார்.

- Advertisement -

Read more

Local News