Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

மதுபானம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாக நடிகை ஷப்னா ஆஸ்மி புகார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மும்பையில் கொரோனா தொற்று காரணமாக மிகக் கடுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. தேவையில்லாமல் வெளியில் வந்து செல்பவர்கள் கைது செய்யப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும் தண்டனைக்குள்ளாக்கப்படுகிறார்கள்.

மேலும் வயதானவர்களை கண்டிப்பாக வெளியில் வர வேண்டாம் என்று அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் 70 வயதான பழம் பெரும் பாலிவுட் நடிகையான ஷப்னா ஆஷ்மி மது பானத்தை சப்ளை செய்யும் நிறுவனம் தன்னை ஏமாற்றிவிட்டதாக டிவீட்டரில் புகார் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவை முன்னிட்டு தற்போது மும்பையில் வீட்டுக்கே மது பானங்களை சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அப்படியொரு நிறுவனத்தில் சப்னா ஆஷ்மியும் தனக்கான மது பானங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய பணத்தையும் முன் கூட்டியே கட்டிவிட்டாராம். ஆனாலும் மது பானங்கள் அவர் கைக்கு வரவில்லையாம். இது பற்றி அந்த நிறுவனத்திற்கு தொலைபேசியில் கேட்டபோது முதலில் பதில் சொல்லாதவர்கள் தற்போது ஷப்னாவின் போன் அழைப்பை எடுப்பதே இல்லையாம்.

இதை ஷப்னா தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எந்த பிராண்டு, எவ்வளவு ரூபாய்க்கு என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. இதனால் பல டிவீட்டர்வாசிகள் அவரிடம் இது குறித்துக் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News