விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த் சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலே, பிரிந்து விட்டதாக அறிவித்த இவர்கள், ஒருவரை ஒருவர் குறை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்யுக்தா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், “விஷ்ணுகாந்த் கொடுத்த அத்தனை இன்டர்வியூகளிலும் நான் அஃபேரில் இருந்ததாக கூறியுள்ளார். இது பற்றி கேட்டபோது அவர் இன்டர்வியூவில் பதில் சொல்ல மறுத்து டாப்பிக்கை மாற்றிவிட்டார். அந்த அஃபேர் என்ற வார்த்தைக்கு எனக்கு மீனிங் தெரிந்தாக வேண்டும் விஷ்ணுகாந்த்.
திருமணம் செய்துகொள்ளாவிட்டால் செத்துவிடுவேன் என சொல்லி மிரட்டினார். அவருக்கு 32 எனக்கு 22 வயது. 10 வயது வித்தியாசம் என்றாலும் நான் அவருக்கு ஓகே சொன்னேன். ஏன்னா நல்லவரா இருந்தா போதும் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் நான் என் காதலை வெளிப்படுத்திய பிறகுதான் தெரிந்தது இவரது உண்மையாக சுயரூபம் என்ன என்று. அதன்பிறகு நான் எதாவது சொன்னால் இது செட் ஆகாது உனக்கு ப்ரேக்கப் ஆகிவிட்டது என்று இன்ஸ்டாவில் போடு என்று சொல்லுவார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்து நான் அவரது காலில் விழுவேன். பண்ணாத தப்புக்கு நான் சாரி கேட்டேன்.
என் ஜாதகத்தில் இருக்கிறது. 25 வயதுக்குள் கல்யாணம் பண்ணால் இந்த கல்யாணம் நிலைக்காது என்று. 2-வது கல்யாணம் தான் நிலைக்கும் என்று என் ஜாதகத்தில் இருக்கிறது. இதை அவரிடம் சொன்னபோது ஜாதகம் எனக்கு நம்பிக்கை இல்லை. சம்யுக்தா இல்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்று என் அம்மாவிடம் சொல்லி கல்யாணதிற்கு சம்மதம் வாங்கிவிட்டார். 8 மாத பழக்கத்தில் என் மகளை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று அம்மா கேட்டார்.
இல்லை நான் சம்யுக்தாவை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னுடன் அவரை பழக விடுங்கள் என்று சொன்னார். அதன்பிறகு கொஞ்சநாள் போகட்டும் பார்த்துக்கொள்வோம் என்று என் அம்மா சொன்னார் இதுதான் நடந்தது” என்று கூறியுள்ளார் சம்யுக்தா.