மலையாளத் திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தமிழில் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர், ‘உத்தம வில்லன்’, ‘என்னை அறிந்தால்’, ‘மாலை நேரத்து மயக்கம்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘சீதக்காதி’ ஆகிய பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, அவருக்கு தகுந்த நடிப்பு வாய்ப்புகள் சரியாக கிடைக்கவில்லை.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை பார்வதி நாயர் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது, இந்த தம்பதியினர் தேனிலவு பயணமாக மாலத்தீவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு ஹாலிவுட் நடிகைகள் போல் ஸ்டைலிஷ் பிகினி உடையில் கணவருடன் சிறப்பாக ஹனிமூன் கொண்டாடும் புகைப்படங்களை பார்வதி நாயர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.