திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா யாருடன் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்தது.
இந்த நிலையில், அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த திரைப்படம் லவ், ரொமான்ஸ், திரில்லர் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டு உருவாக இருக்கிறது.
ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி , ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது
ஏற்கெனவே இந்த புதிய படம் குறித்து தகவல்கள் கசிந்தாலும், இப்போதுதான் பட குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டதோடு, பட போஸ்டரையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் ஜெயம் ரவி முகத்தில் ரௌத்திரத்துடன் காணப்படுகிறார். இதிலிருந்து இந்த படம் பயங்கர மிரட்டலாக இருக்கும் என்று தெரிகிறது.