பிராட்வே சுந்தர் இயக்கத்தில் தீபா சங்கர், மீசை ராஜேந்திரன், கிங்காங், டெலிபோன் ராஜ், பெஞ்சமின், விக்னேஷ், சஹானா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் “உயிர் மூச்சு” .

முதலுதவியை மையக்கருத்தாகக் கொண்டு, வரதட்சணை கொடுமை, லஞ்சம், ஊழல் மற்றும் மதுபோதையால் ஏற்படும் சீரழிவு ஆகியவற்றை கதைக்களமாக கொண்ட இந்த திரைப்படத்தில், தமிழ் திரையுலகில் முதன்முறையாக வில்லனாக அறிமுகமாகும் டெலிபோன் ராஜின் வில்லத்தனத்துடன் விறுவிறுப்பான திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திரைப்படம் திரையரங்குகள் இல்லாமல் வெளியாகாமல் தடுமாறி வருகிறது.
நடிகர் மீசை ராஜேந்திரன் இப்படத்தைப் பற்றிப் பேசும்போது, நான் இதுவரை ஏற்றுக்கொள்ளாத புதிய கதாப்பாத்திரத்தில் ‘உயிர் மூச்சு’ திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். நடிகை தீபாவின் நீதிமன்றக் காட்சி வரும்போது, அவர் அளித்த சிறப்பான நடிப்பால், எனக்கே தெரியாமல் கண்கள் நீர்த்துவிட்டன. இன்றைய சூழ்நிலைக்கு தேவையான கதையை அத்திமரப்பட்டி விவசாயி ஜோதிமணி எழுதியுள்ளார். தற்போது கோடைகால விடுமுறையால் பெரிய நடிகர்களின் படங்கள் அதிகமாக வெளியாகி உள்ளதால், நல்ல கதை அம்சம் கொண்ட ‘உயிர் மூச்சு’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. ஆனால் விரைவில் தமிழகமெங்கும் இப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கும் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.இந்த படத்தை இயக்கிய பிராட்வே சுந்தர் இதற்கு முன் அரசியல் சதுரங்கம், விதி எண் 3, கருப்பு பக்கம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.