Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

நடிகை கடத்தப்பட்ட வழக்கு – காவ்யா மாதவன் கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரளாவின் பரபரப்பான நடிகை கடத்தப்பட்ட வழக்கின் விசாரணை தற்போது சூடு பிடித்துள்ளது.

2018-ம் ஆண்டு புகழ் பெற்ற மலையாள நடிகையொருவர் நள்ளிரவில் ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது சிலரால் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் மலையாள சினிமாவுலகத்தின் மிகப் பெரிய நடிகர்களில் ஒருவரான திலீப்பும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

நடிகை காவ்யா மாதவனுடன் திலீப் சற்று நெருக்கமாக இருந்த ஒரு தருணத்தை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்த பாதிக்கப்பட்ட நடிகை, அதனை அப்போது திலிப்பீன் மனைவியான நடிகை மஞ்சு வாரியருக்கு செல்போனில் அனுப்பியதாகவும், இதனாலேயே திலீப்-மஞ்சு வாரியருக்கு இடையில் பிரச்சினை எழுந்து கடைசியில் அது விவகாரத்தில் முடிவடைந்தது.

இந்தக் கோபத்தில்தான் திலீப் அந்த நடிகையை ஆள் வைத்து இப்படி துன்புறுத்தியதாக போலீஸ் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில் மலையாளத் திரையுலகத்தில் இருந்து 50 நடிகர், நடிகைகள்வரையிலும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் தங்களது சாட்சியங்களை அளித்துவிட்டார்கள்.

நடிகைகள் மஞ்சு வாரியர், சம்யுக்த வர்மா, ரிமி டோமி, நடிகர்கள் முகேஷ், சித்திக், லால் மற்றும் சிலரும் இதுவரையிலும் சாட்சியம் அளித்துள்ளனர்.

நடிகை மஞ்சு வாரியர் அளித்துள்ள சாட்சியத்தில் “தன் கணவர் திலீப்பும், காவ்யா மாதவனும் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை தனக்கு பாதிக்கப்பட்ட நடிகை அனுப்பியதால் திலீப் அவர் மீது கோபமாக இருந்தார்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல் பலரும் இந்தச் சம்பவத்தால்தான் திலீப்புக்கும் அந்த நடிகைக்கும் இடையில் முன் விரோதம் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்கள். ஆனால் திலீப்தான் பாதிக்கப்பட்ட நடிகையை துன்புறுத்த ஆட்களை அனுப்பினாரா என்பது எங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்களாம்.

கொரோனா லாக் டவுன் காரணமாக சிறிது காலம் தடைபட்டிருந்த வழக்கு விசாரணை தற்போது மும்முரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைக்கு இந்த வழக்கில் சாட்சி சொல்ல நடிகர் திலிப்பீன் மனைவியும் நடிகையுமான காவ்ய மாதவன் கோர்ட்டில் ஆஜரானார்.

அப்போது அவர், பாதிக்கப்பட்ட நடிகைதான் தானும் திலீப்பும் பேசிக் கொண்டிருந்த புகைப்படத்தை மஞ்சு வாரியருக்கு அனுப்பி வைத்ததாக திலீப் தான் திருமணமாகி வந்த பின்பு தன்னிடம் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கில் இன்னும் பல சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டியிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த வழக்கு பல்வேறு காரணங்களினால் இப்படி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இந்த வருடம் நிச்சயமாக தீர்ப்பு வந்துவிடும் என்று கேரளாவே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

Read more

Local News