Touring Talkies
100% Cinema

Saturday, June 28, 2025

Touring Talkies

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷூடன் இணைந்து அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்கும் நடிகர் விஷ்ணு விஷால்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர் விஷ்ணு விஷால். அவரின் நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அவரின் தம்பி ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, இன்று (ஜூன் 28) சென்னையில் நடைபெற்றது. கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கும் இப்படத்தில், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் பணியாற்றியுள்ளார். கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ள இந்தப் படத்தில், அஞ்சு குரியன், மிஷ்கின் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10 படங்களில், 3 படங்களை விஷ்ணு விஷாலுடன் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.

அவரது அறிவிப்பின் படி, ‘பேச்சுலர்’ திரைப்படத்தை இயக்கிய சதீஷ் இயக்கும் படம், ‘கனா’ மற்றும் ‘நெஞ்சுக்கு நீதி’ படங்களை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கும் படம், மற்றும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய செல்ல அய்யாவு இயக்கும் படம் என மூன்று திரைப்படங்களை விஷ்ணு விஷால் தயாரிக்க உள்ளார். இந்த அறிவிப்புகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

- Advertisement -

Read more

Local News