Tuesday, July 2, 2024

விஜய் சேதுபதியின் 50-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படங்கள் வெளியாகின. பாலிவுட்டில் தடம் பதித்த அவரின் ‘ஃபார்ஸி’ வெப் சீரிஸும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். போலவே, ‘மேரி கிறிஸ்துமஸ்’ பாலிவுட் படத்தில் கத்ரீனா கைஃபுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அவரின் 50-வது படத்தை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம்  இன்று – ஜூலை 12 –  வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர்களும் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News