Wednesday, February 24, 2021
Home HOT NEWS 'மாஸ்டர்' படக் குழுவுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய நடிகர் விஜய்..!

‘மாஸ்டர்’ படக் குழுவுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய நடிகர் விஜய்..!

மாஸ்டர்’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறார் படத்தின் ஹீரோவான நடிகர் விஜய்.

இந்த விழா இன்று ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றுள்ளது.

மாஸ்டர்’ படத்தில் இடம் பெற்ற சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கான செட் ஈ.வி.இ. ஸ்டூடியோவில் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டிருந்தது.

இப்போது இந்த செட்டில்தான் ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றி விழாவை அந்தப் படக் குழுவினர் கொண்டாடியுள்ளனர்.

மாஸ்டர்’ திரைப்படம் வெளியான முதல் நாளே 25 கோடியை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், தமிழகம் முழுவதும் இருந்து வந்த செய்திகளின்படி படம் வெளியான நாள் முதலே அந்தப் படம் ஓடும் அனைத்துத் தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டுள்ளது என்கிறார்கள்.

எனவே நிச்சயமாக படம் வெற்றியடைந்துள்ளது என்றே சொல்லலாம். இதையொட்டி விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படக் குழுவினரும் படப்பிடிப்புத் தளத்தில் பொங்கல் தினத்தைக் கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்த விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாக வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை...

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி’. தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளிலும்...

மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது. இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது....