Friday, October 22, 2021
Home HOT NEWS "ஸ்ரீகாந்த் ஒரு அற்புதக் கலைஞர்"-நடிகர் சிவக்குமாரின் அஞ்சலி பதிவு

“ஸ்ரீகாந்த் ஒரு அற்புதக் கலைஞர்”-நடிகர் சிவக்குமாரின் அஞ்சலி பதிவு

தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவு குறித்து மூத்த நடிகரான சிவக்குமார் எழுதியிருக்கும் அஞ்சலி பதிவு இது :

மிகையுணர்ச்சி அல்லாமல் தனது இயல்பான நடிப்பை எப்போதும் வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த், தனது 81 வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மறைந்தார். அவருக்கு அஞ்சலி.

1965 ஏப்ரலில் ஜெயலலிதா அம்மையாரோடு முதல் ஜோடியாக ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்திலே கதாநாயகனாக நடித்தவன் ஸ்ரீகாந்த்.

ஈரோட்டிலே பிறந்த அவன் அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்தவன். கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்தவர் ‘வெங்கி’ என்கின்ற இந்த ஸ்ரீகாந்த். பாலசந்தருடைய ‘மேஜர் சந்திரகாந்த்’ என்ற நாடகத்தில் ‘ஸ்ரீகாந்த்’ என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமானபோது தனக்குச் சூட்டிக்கொண்டான்.

நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தவர். வாலி கவிதை உலகிலே கரை கண்டவர். வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களிலே சாப்பாட்டுக்கு திண்டாட்டம் போட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு மாம்பலம் க்ளப் ஹவுசில் அந்த இருவரையும் காப்பாற்றியவர்.

கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘ஜெயகாந்தனின் கதை’, ‘ராஜநாகம்’ போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர். என்னோடு ‘மதனம ாளிகை’, ‘சிட்டுக்குருவி’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அன்னக்கிளி’, ‘யாருக்கும் வெட்கமில்லை’, ‘நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர்.

சமீபத்திலே 80 வயது பூர்த்தியாகி விழா கொண்டாடினார். அன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஸ்ரீகாந்த், அவரது துணைவியார் லீலாவதி, மீரா அவர் கணவர் ஜாக் அலெக்‌ஸாண்டர், பேத்தி காவேரி ஆகியோரைச் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு Coffee Table புத்தகங்களை கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தேன். இன்று அந்த அற்புத கலைஞர் அமரராகி விட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்.

– நடிகர் சிவகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் ‘ஜெய்’

ராகுல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் தயாரித்துள்ள திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. பிரம்மாண்டமான செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய்...

இறுதி கட்ட பணிகளில் நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம்!

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க,...

கேரளாவில் விற்பனையாகும் லாட்டரி தொழில் பற்றிய ‘பம்பர்’ திரைப்படம்

கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்ட 'பம்பர்' என்ற தமிழ் திரைப்படத்தில் ‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். வேதா பிக்சர்ஸ்...

ஜெய் பீம் படத்தின் டிரெயிலர்

Amazon Prime Video presents, Jai Bhim Official Telugu Trailer Starring Suriya, Prakash Raj, Ramesh, Rajisha Vijayan, Manikandan and Lijo mol Jose Written...