Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

6 நிமிட காட்சியில் ஒரே டேக்கில் நடித்து அசத்திய சிம்பு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் மாநாடு. சிம்பு கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர், அஞ்சனா கீர்த்தி, உதயா, மனோஜ் கே. பாரதி, பிரேம்ஜி, கருணாகரன், மகத்,  டேனியல் போப்,  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். உமேஷ் ஜே குமார் கலையை கவனிக்க, ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியைக் கையாள, மதன் கார்க்கி பாடல்கள் எழுத, நடனம் அமைக்கிறார் ராஜூ சுந்தரம். வாசுகி பாஸ்கர் ஆடை  வடிவமைப்பினை கவனித்துக் கொள்கிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ‘அப்துல் காலிக்’ என்கிற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்றைய படப்பிடிப்பின்போது, சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சியை படமாக்கினார் வெங்கட் பிரபு. படத்தின் மிக முக்கியமான, கிட்டத்தட்ட ஆறு நிமிடம் நீளமாகக் கொண்ட இந்த காட்சியில், ஒரே டேக்கில் நடித்து அசத்தினார் சிம்பு.

சிம்பு சிங்கிள் டேக் நடிகர் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஆறு நிமிட காட்சியை கூட, ஒரே டேக்கில் அவர் நடித்து முடித்ததை கண்டு அசந்துபோன படக் குழுவினர், காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும்… உடனே கை தட்டல் மூலமாக நடிகர் சிம்புவுக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

- Advertisement -

Read more

Local News