‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் கடந்த ஒரு மாத காலமாக யாரும் தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் இருக்கிறார். காரணம், அவருடைய இரண்டு தொலைபேசி எண்களும் மாற்றப்பட்டுவிட்டதுதான்.
மாற்றப்பட்ட அந்த இரண்டு எண்களும் அவருடைய குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதாம். அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருக்கிறார். பத்திரிகையாளர்களுக்குக்கூட கிடைக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
சரத்குமார் தமிழ்த் திரையுலகத்தில் உச்சத்தில் இருந்தபோதுகூட இந்த அளவுக்கு தலைமறைவாக இருந்தது இல்லை. ஆனால், இப்போது மட்டும் ஏன் என்று விசாரித்தால் நமக்கே பயம் காட்டுவதுபோல பல செய்திகள் வெளிவந்தன.
ஒரு நாள் சரத்குமாருக்கு ஒரு போன் அழைப்பு வருகிறது. யார் அழைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் அது அவருடைய எண்தானாம். தன்னுடைய எண்ணில் இருந்தே தனது செல்போனுக்கே எப்படி போன் பேச முடியும் என்று குழம்பிப் போய் போனை ஆன் செய்து பேசியிருக்கிறார்.
போன் பேசியவர் தான் கோவையில் இருந்து பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். “அதெப்படி என் நம்பரில் இருந்து எனக்கே அழைப்பு விடுப்பீர்கள்…?” என்று சந்தேகத்துடன் சரத்குமார் கேட்க.. “அதெல்லாம் இப்போ சப்பை மேட்டர் ஸார். யார், நம்பர்ல இருந்து, யார் வேண்டுமானாலும் பேசலாம். டெக்னாலஜி அந்த அளவுக்கு வளர்ந்திருக்கு” என்றாராம் அந்த நபர்.
உடனேயே பயந்து போன சரத்குமார் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்திருக்கிறார். காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார். ஆனாலும் ஆளைப் பிடிக்க முடியவில்லையாம்.
இதனால் சரத்குமார் எடுத்த திடீர் முடிவுதான் இந்த புத்தம் புதிய போன் நம்பர்கள். நம்பர்களை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கிறார் சரத்குமார் என்கிறது கோடம்பாக்கம் வட்டாரம்.
கொசுறு செய்தி : சரத்குமார் அடுத்து ஒரு வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இதனை ரேடான் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாம். தமிழில் அல்ல.. தெலுங்கில்.