Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

OTT-யில் படங்களை வெளியிட நடிகர் சந்தானம் ஆதரவு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் மிகப் பெரிய நடிகர், நடிகைகள் நடித்த படங்கள் வரிசையாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் போக்கு நீடித்தால் இன்னும் சில நாட்களில் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதையே மறந்துவிடுவார்கள். பின்பு தியேட்டர்களில் எந்தப் படத்தைப் போட்டாலும் கூட்டம் வராது என்கிறார் தியேட்டர் உரிமையாளர்கள்.

ஆனால், “இப்படி படங்கள் ஓடிடியில் வெளியாவது சரிதான்” என்கிறார் நடிகர் சந்தானம். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இந்தக் கொரோனா தொற்றுக் காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுவது அவ்வளவு சரியானதாக இல்லை. அதனால் ஓடிடியில் படங்கள் வெளியாவதில் தவறில்லை.

திரைப்படங்கள் கடவுளைப் போல.. இதில் தியேட்டர்கள் கோவில் போன்றவை.. ஓடிடிக்கள்தான் பூஜையறை. இதனால் ஒன்றும் பாதிப்பில்லை.

சினிமாவை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் துவங்கி போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள்வரையிலும் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த சினிமா தொழிலை நம்பியே உள்ளார்கள்.

தியேட்டர்களை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது என்பதால் அனைவரது நலனுக்காகவும் ஓடிடிக்களில் படங்களை வெளியிடுவதே சரியானதாக இருக்கும்…” என்று சொல்லியிருக்கிறார் சந்தானம்.

- Advertisement -

Read more

Local News