நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எம்புரான்’. 2019ல் மோகன்லால் – பிரித்விராஜ் கூட்டணியில் வெளிவந்த ‘லூசிபர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் உருவாகியுள்ளது. மார்ச் 27ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழுவினர் புரமோஷன் நடவடிக்கைகளை துவக்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் இயக்குனர் பிரித்விராஜ் ரஜினிகாந்தை சந்தித்து, முதல் நபராக இப்படத்தின் டிரைலரை அவருக்குக் காட்டினார்.

இந்த நிலையில், மோகன்லால் சபரிமலைக்கு சென்று ஐயப்பன் தரிசனம் செய்துள்ளார். பம்பையில் இருந்து நடந்தே அவர் சன்னிதானம் சென்றுள்ளார். மேலும், மம்முட்டியின் நிஜப்பெயரான “முகமது குட்டி” என்ற பெயரை குறிப்பிடத் தவிர, “விசாக நட்சத்திரம்” என்று சொல்லி, அந்தப் பெயரிலும் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்கு முன்பு, மம்முட்டியிடம் இது குறித்து தெரிவித்துவிட்டு சென்றதாகவும், மேலும் அவரது பெயரில் அர்ச்சனை செய்ய முன்கூட்டியே டோக்கன் பதிவு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று மோகன்லால் வழிபாடு நடத்த, இன்று காலை அவர் மீண்டும் கொச்சிக்கு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு தயாராக இருக்கும் தனது படத்திற்காக மட்டுமல்லாமல், நண்பர் மம்முட்டிக்காகவும் மோகன்லால் சபரிமலையில் வழிபாடு செய்துள்ள சம்பவம், இருவரது ரசிகர்களிடமும் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.