Tuesday, August 13, 2024

சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்மேற்கு பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘மாமனிதன்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநரான சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கிவிருக்கிறார்.

முன்னதாக ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில் நடித்திருக்கும் மாதம்படி ரங்கராஜ் தற்போது ‘கேசினோ’ எனும் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து பெயரிடப்படாத மற்றுமொரு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சகர்களின் நல்ல மதிப்பீடுகளையும் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஒரு காதல் கதையில் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறவிருக்கிறது. வரும் டிசம்பரில் தொடங்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட இதர விபரங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

இப்படத்தின் இதர தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகையர் தொடர்பான தேர்வுகள் நடைபெற்று வரு நிலையில், அவை குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News