கடந்த சில ஆண்டுகளாக ஜீவா நடித்த திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே பெரிதளவில் வெற்றியை பெற முடியாமல் சறுக்கிவந்தாலும் கடைசியாக அவர் நடித்த பிளாக் மற்றும் அகத்தியா திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து விடாமுயற்சியுடன் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது, மலையாளத்தில் வெளியான ‘பலிமி’ படத்தை இயக்கிய நிதிஷ் சகாதேவ் இயக்கும் தமிழ் திரைப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படம் முழுவதுமாக தமிழில் உருவாகிறது மற்றும் ஜீவாவின் 45வது படமாகும்.
இப்படத்தில் தம்பி ராமையா, ஜெய்வந்த், பிரார்த்தனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் இடம்பெறுகிறார்கள். இந்தப் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது.